Aug 21, 2019, 3:03 PM IST
நாடெங்கும் விபத்துகளை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது . தலைக்கவசம் இல்லாமல் ஏற்படும் விபத்துகளில் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகின்றன . இதை தடுக்க , தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தினாலும் , அதை பெரும்பாலானோர் கேட்பதாக இல்லை .
இதனால் புதிய மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துதுள்ளது . அதன்படி இனி தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் வசூலிக்கப்படும் அபராதம் 100 இல் இருந்து 1000 ஆக அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது .
ஆகஸ்ட் 15 சுதந்திர தின நாள் முதல் போக்குவரத்து விதிகள் மாற்றப்பட்டு, விதிகளையும் மீறுவோருக்கு அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டது இதன் மூலம் இச்சசட்டம் இந்திய முழக்க கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் கேரளா மாநிலம் ஆலப்புழா என்ற இடத்தில் நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணியாமல் காவலரகள் இருவர் சென்ற உள்ளனர்
இதனைக் கண்ட இளைஞர் ஒருவர், தனது இருசக்கர வாகனத்தில் அவர்களை துரத்திச் சென்றார். அப்போது அவர்களை சீட் பெல்ட் அணியுமாறு வலியுறுத்தினார். இதனை வீடியோவாக அவர் பதிவு செய்துக்கொண்டிருப்பதாக காவலரகள்யிடம் தெரிவித்த உள்ளார் அந்த இளைஞர் ஆனால் இளைஞரின் கோரிக்கையை பொருட்படுத்தமால் காவலரகள் சீட் பெல்ட் அணியாமல் வண்டி ஓட்டிச் சென்றனர் உள்ளனர் .
அதன் பின்னர் காவலரகளின் நான்கு சக்கர வாகனத்தை முந்திச் சென்ற இளைஞர், போலீஸ் வாகனத்தை தடுத்து நிறுத்தி, அவர்களை சீட் பெல்ட் அணிய வைத்தார்.