முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் இறுதி ஊர்வலம் வீடியோ..

Aug 7, 2019, 4:53 PM IST

பிஜேபியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுஷ்மா சுவராஜ்,  நேற்று இரவு மாரடைப்பால் காலமானார்.  கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிக்கிச்சை செய்து கொண்டார்.  இந்நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சுஷ்மா சுவராஜ் காலமானார்.  சுஷ்மாவின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து தங்கள் இரங்கல் செய்தியை தெரிவித்து வந்த நிலையில் . இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இறுதி ஊர்வலம் டெல்லியில் தற்ப்போது தொடங்கியது உள்ளது சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு, 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் டெல்லி அரசு அறிவித்துள்ளது அதேபோல் முன்னாள் முதலமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மறைவையொட்டி  அடுத்த 2 நாட்களுக்கு அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து என்றும் தெரிவித்துள்ளது 

இதேபோல் ஹரியானாவிலும் 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது