தசரா திருவிழாவில் அனைவரின் கவனம் ஈர்த்த புலியாட்டம்

Oct 5, 2022, 6:20 AM IST

தசரா என்றாலே முதலில் நினைவுக்கு வருவது மைசூர்தசரா தான். மறுபுறம் மங்களூர் தசரா. தசரா வந்தால் போதும், புலி வேஷம் போட்டு வீட்டுவீட்டுக்கு வந்து   புலி வேஷம் போட்டவர்கள் ஆடி பணம் பெற்றுசெல்வார்கள் கர்நாடகாவின் கடலோர மாவட்டமான தட்சிண கன்னடா அதன் பல நாட்டுப்புற கலைகள்  திருவிழாக்களாக கொண்டாடப்படுகிறது.

அங்கு பல திருவிழாக்கள் மிகுந்த ஆடம்பரத்துடன் கொண்டாடப்படுகின்றன. அத்தகைய பண்டிகைகளில் தசரா மிகவும் பிரபலமான பண்டிகை. தசரா திருவிழா 9 நாட்கள் நீடிக்கும் மற்றும் கடைசி திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. புலி வேடத்தில் நடனமாடி பார்வையாளர்களை கவரும்படியே இருந்து வருகிறது. தசரா பண்டிகையின் போது புலி வேஷம் அதன் வித்தியாசமான தோற்றத்தில் பிரபலமாக உள்ளது.

காலங்கள் நவீன யுகங்களாக மாறினாலும் நாட்டுப்புறக் கலைகளும் பல்வேறுவிதமான கலைகளும் அழியாமல் இன்னும் இந்த பகுதி மக்களிடையே இருந்து கொண்டுதான் இருக்கிறது