Watch : வெள்ளத்தில் சிக்கிய மாடுகளை மீட்ட மீனவர்கள்!

Jul 23, 2022, 1:38 PM IST

ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஆறு, குளம், குட்டைகள் என அனைத்தும் நிரம்பி வழிகிறது. ஆற்றுக்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வேலுக்கோடு நீர் பிடிப்பு பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஏராளமான மாடுகள் சிக்கின. கழுத்தளவு தண்ணீரில் சிக்கிய மாடுகளை நந்தியாலா மீனவர்கள் கண்டு மீட்டனர். கழுத்தளவு தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த மாடுகளை, மீனவர்கள் திசைதிருப்பி கரைக்கு அழைத்து வந்தனர்.