இந்தி நடிகர் சுஷாந்த் சிங்கின் இறப்பிற்கு பின்னால் சதி..! வெளிவரும் உண்மைகள்..? நண்பரின் பிரத்தியேக வீடியோ..

Jun 15, 2020, 12:16 AM IST

வணக்கம் என் பெயர் சூர்யா திவிவேதி. நான் போஜ்புரி நடிகன். என் இளைய தம்பி சுஷாந்தின் மரண செய்தியை கேட்டேன். என்னால் சற்றும் நம்ப முடியவில்லை.

டெல்லியில் இருந்து மும்பை வந்து என்னுடன் தங்கி இருந்தார். அவர் நடன பள்ளிக்கு சென்று இருக்கிறார். நான் அவரை நடிப்பு பள்ளியில் சேர்த்தேன். என்றும் எதிலும் உறுதியனவர்.

ஒரு பிரச்சனையின் தீர்வை எளிதாய் கண்டுபிடிப்பவர். நடிப்பின் மேல் தீராத வேட்கை கொண்டவர். அவரது தாயின் இறப்பு 2002-ல் அவருக்கு பெரிய இழப்பாய் இருந்தது. நண்பர்களுடன் நேரம் கடத்தினர் என்றெல்லாம் கேள்விப்பட்டேன்.

வண்ணமயமான வாழ்க்கையை வாழ்ந்தவர். அவரின் இந்த முடிவிற்கு ஏதோ பெரிய காரணம் இருக்கிறது என்று மட்டும் தெளிவாக நம்புகிறேன். அவருக்கென்று ஒரு உலகம் இருந்தது. அவருக்கென்று ஒரு நட்பு வட்டாரம் இருந்தது.

அவரின் படம் வெளியாகி நன்றாக ஓடியபோது கூட அவரிடம் பேசினேன் அப்போது எனக்கு நன்றியெல்லாம் கூறினார்.

சுஷாந்தும், தற்கொலையும் இரண்டும் வெவ்வேறு விஷயங்கள். இரண்டிற்கும் தொடர்பே இல்லை. அவர் எதிலும் போராடுபவர். சில நேரங்களில் நடிகர்கள் இப்படி பட்ட மன உளைச்சலுக்கு தள்ளப்படுகின்றனர், அதில் இருந்து மீண்டு வர வேண்டும். அவர் மிகவும் புத்திசாலித்தனமான நடிகர்.

அதை அனைவருக்கும் அவர் நிரூபித்தும் உள்ளார். அவர் முழுக்க முழுக்க அன்பால் ஆனவர். அன்பால் ஆனா நபர் எப்படி மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டிருக்க முடியும்.

இந்த இறப்பிற்கு பின்னால் ஏதோ சதி இருக்கிறது என்பது மட்டும் நன்றாக தெரிகின்றது இதற்கு மேல் என்னால் பேசமுடியவில்லை. நன்றி.