Aug 30, 2022, 3:24 PM IST
ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் 12ம் வகுப்பு படித்து வந்தவர் மாணவி அங்கிதா குமாரி. இவரை பக்கத்து வீட்டில் குடியிருந்து வந்த ஷாரூக் ஹூசைன் என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். அவரது காதலை ஏற்க அந்த மாணவி மறுத்து வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஷாரூக் ஹூசைன் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து மாணவி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் அந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் ஷாரூக் ஹூசைனை கைது செய்தபோது, கொஞ்சமும் குற்ற உணர்வு இல்லாமல், சிரித்துக் கொண்டே சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.