Aug 30, 2019, 4:11 PM IST
தெலங்கானா மாநிலத்தின் நல்கொண்டா மாவட்டத்தை சேர்ந்த திருமணமான பெண்ணுக்கு இளைஞர் ஒருவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துதகாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் தொந்தரவுகளை பொறுத்துக்கொள்ள முடியாத அந்த பெண் நடந்தவற்றை அவரது கணவரிடம் கூறியுள்ளார்.
தம் கண் முன்னே மனைவியிடம் அந்த இளைஞர் தவறாக நடக்க முயன்றதை கண்ட பெண்ணின் கணவர் அந்த இளைஞரை மரத்தில் கட்டி வைத்தார். பின்னர் போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்னர் தனது ஷூவை மனைவிடம் கொடுத்து அந்த இளைஞரை தாக்குமாறு மனைவிடம் சொல்லியதை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் ஆத்திரம் தீரும் வரை இளைஞரை ஷுவால் அடித்து சரமாரியாகத் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.