Watch : கலவர பூமியாகும் புதுச்சேரி! - எதிர்கட்சித் தலைவர் இரா.சிவா குற்றச்சாட்டு!

Sep 21, 2022, 6:38 PM IST

இதுகுறித்து சடப்பேரைவில் உள்ள எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரி மாநில அரசு துறைகளில் காலியாக உள்ள உதவியாளர் பதவிக்கு நேரடியாக பணி நியமனம் செய்ய புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. இது புதுச்சேரி மாநிலத்தில் படித்து பட்டதாரியாக உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை தடுக்கும் செயலாகும் என்றும், தற்போது பணியில் இருக்கும் இளநிலை மற்றும் முதுநிலை எழுத்தர் பதவியில் உள்ளவர்களை பதவி உயர்வு மூலம் அரசு உதவியாளர் பதவியை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், தந்தை பெரியார் திராவிடக்கழகத்தினர் காவல் துறை அனுமதி பெற்று மனுதர்ம சாஸ்திரத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய நிலையில், அந்த போராட்டத்தில் பாஜகவினர் புகுந்து தாக்குதல் நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், அமைதியாக இருக்கும் புதுச்சேரியை கலவர பூமியாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், மேலும் பாஜகவை சேர்ந்த ஆட்சியாளர்களின் நிர்ப்பந்தத்தின் பேரில் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது ஜாமினில் வெளியிட முடியாதபடி வழக்குப்பதிவு செய்யப்போவதாக தெரிகின்றது. இது போன்ற பொய் வழக்குகளை காவல்துறையினர் தவிர்ப்பது புதுச்சேரியின் அமைதியை பாதுகாக்கும் என சிவா தெரிவித்துள்ளார்.