Sep 9, 2019, 1:44 PM IST
பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் மாவட்டதை சேர்ந்த இரண்டு சிறுவர்கள், அண்மையில் காணாமல் போய் உள்ளனர் . சிறுவர்களை இரண்டு நாட்களாக உறவினர்கள் தேடிவந்த உள்ளனர் இந்நிலையில் 2 சிறுவர்களின் சடலமாக அப்பகுதியில் உள்ள சாக்கடையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சிறுவர்கள் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு இறந்து இருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைந்தனர். ஆனால், சாக்கடையில் மூழ்கிதான் சிறுவர்கள் இறந்ததாக, போலீசார் தொடர்ந்து தெரிவித்து வந்துள்ளனர். மேலும், இந்த புகாரை முறையாக விசாரிக்காததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு சில போலீசாரை பிணைக் கைதிகளாக பிடித்து சரமாறியாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளந்து தற்ப்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.