Watch : காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு விருந்து வைத்த பிரதமர் மோடி!

Aug 13, 2022, 12:39 PM IST

இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 4வது இடத்தை பிடித்தது. பிவி சிந்து, சிராஜ் ஜோடி, லக்‌ஷயா சென், சரத்கமல் ஆகிய பல முன்னணி வீரர்கள் தங்கம் வென்று அசத்தினர்.

காமன்வெல்த் போட்டியில் கலந்துகொண்ட மற்றும் பதக்கம் வென்ற வீரர்களை பிரதமர் மோடி பாராட்டினார். மேலும் பிரதமர் மாளிகையில் இன்று பிரம்மாண்ட விருந்தும் அளித்தார். இதில் பதக்கம் வென்ற வீரர்கள் கலந்துகொண்டனர்.