மண் தோண்டி உயிரோடு மாட்டை புதைக்கும் அதிர்ச்சி வீடியோ.. அரசு எடுத்த இப்படி ஒரு முடிவால் அதிர்ந்து போன மக்கள்..!

Sep 6, 2019, 2:40 PM IST

நீல காளை என்று அழைக்கப்படும் நில்கை மாடுகள் இந்திய துணைக்கண்டத்தின் மிகப்பெரிய காட்டு மாடு (nilgai antelope) வகையைச் சார்ந்தது இந்த காட்டுமாடுகள் பீகார் மாநிலத்தில் விவசாயிகளின் பயிர்களை அழிப்பதால் பலர் பயிர்களை சேதப்படுத்தி வந்து உள்ளன.

 இதனால் நில்கை காட்டுமாடுகள் குறித்து அரசிடம் முறையிட்ட விவசாயிகள் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தினர். இதனை பீகார் அரசு உடனடியாக நில்கை மாடுகளை கொல்வதற்கு ஒப்புதல் அளித்தது. அரசு ஒப்புதல் அளித்ததையடுத்து பீகாரின் வைஷாலி மாவட்டத்தில் மட்டும் 300 நில்கை மாடுகள் கொல்லப்பட்டுள்ளன. நில்கை மாடுகளை கொல்வதற்காக பீகார் வனத்துறை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடுபவர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது என்பது குறிப்படத்தக்கது. 

இதில் வனத்துறை துப்பாக்கியால் சுட்டு காயமடைந்த நில்கை மாடு ஒன்று மீது மண்ணை தள்ளி உயிரோடு புதைக்கப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஆனால் விவசாயிகள் தரப்பில் நில்கை மாடுகள் கொல்லப்படுவது குறித்து எந்த வருத்தமும் இல்லை என்றும் தொடர்ந்து மாடுகள் பயிர்களை அழிப்பதால் பலர் விவசாயத்தையே கைவிட்டுவிட்டதாகவும், மனிதர்களை அவைகள் கொல்வது தொடர்கதையானதால் தான் அரசிடம் முறையிட்டதாகவும் கூறப்படுகிறது  உயிரோடு புதைக்கப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.