Aug 6, 2019, 3:52 PM IST
இந்திய முழுவதும் டெல்லி, புதுச்சேரி, டையூ-டாமன், டாட்ரா-நாகர் ஹவேலி, லட்சத்தீவு, அந்தமான்-நிகோபார் தீவுகள், சண்டிகார் என 7 யூனியன் பிரதேசங்கள் ஏற்கெனவே உள்ளன.இதில் டெல்லி மற்றும் புதுச்சேரி ஆகியவை சட்டப்பேரவை கொண்ட யூனியன் பிரதேசங்களாக உள்ளன இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாகும் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.இதனையடுத்து, யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது.
இதற்கான சட்ட திருத்த மசோதாவும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜம்மு- காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் அறிவித்தார். மேலும், மாநில அந்தஸ்தை இழந்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் இரண்டாக பிரிக்கப்பட்டது. இதனால், ஜம்மு-காஷ்மீரில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், உத்தரப் பிரதேசம், ஒடிசா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கூடுதலாக 8000 துணை ராணுவப் படையினரை காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சுமார் 60 ஆயிரம் வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கூடுதலாக மேலும் பல ஆயிரம் வீரர்களை அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, காஷ்மீரில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இது தொடர்பாக்க நாடாளுமன்றத்த்தியில் காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண தனது உயிரையும் கொடுப்பேன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
காஷ்மீர் விவகாரம் குறித்து மக்களவையி அமித்ஷாவிடம் எதிர்கட்சி உறுப்பினர்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப்பெற எந்த நடவைக்கையும் எடுக்கவில்லை என காங்கிரஸ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமித் ஷா, ‘பாகிஸ்தான் மற்றும் சீன ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க என் உயிரையும் கொடுக்க தயார். ஜம்மு காஷ்மீருக்காக சட்டம் இயற்றும் உரிமை நாடாளுமன்றத்துக்கு உள்ளது. அரசியல் காரணங்களுக்காக ஜம்மு- காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கவில்லை.
காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை மறந்து விடாதீர்கள். இந்த விவகாரத்தில் ஐநா தலையிட காங்கிரஸ் விரும்புகிறதா? காஷ்மீர் தொடர்புடைய சட்டம் இயற்ற நாடாளுமன்றத்திற்கு அனைத்து அதிகாரங்களும் உள்ளது. காஷ்மீர் தொடர்புடைய விவகாரங்களில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு யாருக்காவும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசுக்கு உள்ளது. இந்தியாவுக்கு சொந்தமான காஷ்மீர் பகுதிகளையும் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது’’ என அவர் தெரிவித்தார்.