Feb 1, 2024, 11:28 AM IST
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், ஆட்சி மாற்றத்தை கையாளும் வகையில் இந்த இடைக்கால பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்கிறார். தேர்தலுக்கு பின் புதிய அரசாங்கம் பொறுப்பேற்கும் வரையிலான அரசாங்க செலவினங்களை உள்ளடக்கும் தற்காலிக நிதித் திட்டமாக இந்த இடைக்கால பட்ஜெட் இருக்கும்.