Sep 12, 2019, 4:58 PM IST
மழை பெய்ய வேண்டும் என்பதற்காக தவளை, கழுதை ஆகிய உயிரினங்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வுகள் இந்தியாவில் ஆங்காங்கே அடிக்கடி நடக்கும் வழக்கம் உண்டு.
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் கடந்தாண்டு இறுதியில் மழை வேண்டி ஆஷாத் உத்ஷவ் என்ற பெயரில் தவளைகளுக்கு திருமணம் செய்யும் சடங்கு நடந்தது. இந்த சடங்கில் மாநில அமைச்சர் ஒருவர் கலந்துகொண்டார். உள்ளூர் பாஜக தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
அதனை தொடர்ந்து இந்த ஆண்டு ஜுலை மாதமும் அங்கு மழை வேண்டி இரு தவளைகளுக்கு திருமணம் நடத்தப்பட்டது. தற்போது வழக்கமானதை விட 26 சதவிகிதம் அதிக மழை பெய்துள்ளது அதேபோல் மூன்றாண்டுகளுக்குப் பிறகு பல அணைகள் திறந்து விடப்பட்ட உள்ளன .இதனால் திருமணம் செய்து வைக்கப்பட்ட தவளைகளுக்கு விவாகரத்து செய்ய முடிவு செய்தனர்.
ஆனால் விவாகரத்து செய்ய தவளைகள் கிடைக்காத நிலையில், இரு பொம்மை தவளைகளை செய்து இந்திரபுரி பகுதியில் உள்ள ஓம் ஷிவ் சேவா ஷக்தி மண்டல் என்ற அமைப்பு மூலம் திருமணம் செய்து வைத்த தவளைகளுக்கு விவகாரத்து சடங்கு நடத்தினர் இந்த சம்பவம் பார்ப்பவரைகளை அச்சிரியதியில் அலுத்தியுள்ளது.
இதேபோல் கடந்த ஜூன் மாதம் மழை வேண்டி கர்நாடக மாநிலம் உடுப்பியில் இரு தவளைகளுக்கு திருமணம் செய்து ஹனிமூனுக்கு அனுப்பிய சம்பவம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.