Sep 19, 2019, 4:51 PM IST
இந்தியா முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டம் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது அந்தவகையில் விதிமீறலில் ஈடுபடுவோரிடம் இருந்து கடுமையான அபராதத்தொகை வசூலிக்கின்றனர் போக்குவரத்து காவலர்கள் அப்போது சில வினோதமான சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறியவண்ணம் இருக்கின்றன. அதேபோல குஜராத்திலும் ஒரு வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குஜராத்தின் சோட்டா உதய்பூர் பகுதியை சேர்ந்த ஜாகிர் மேமான் என்ற பழ வியாபாரி, அங்குள்ள பிரதான சாலை ஒன்றில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளார் அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போக்குவரத்து காவலர்கள், விதிமீறலில் ஈடுபட்டதற்காக அபராதத் தொகை செலுத்துமாறு ஜாகிரிடம் கூறியுள்ளனர்.
அப்போது ஜாகிர் மேமான், தன் தலை மிகவும் பெரியதாக இருப்பதாகவும் இதனால் தன்னால் ஹெல்மெட் அணிய முடியாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், பல கடைகளில் தன் தலையின் அளவிற்கு ஹெல்மெட் தேடியதாகவும் எங்கேயுமே கிடைக்காததால் தான் ஹெல்மெட் அணியவில்லை என வேதனையுடன் போக்குவரத்து காவலர்களிடம் தெரிவித்துள்ளார்.
இவர் சொல்வது உண்மையா? என்று சோதித்துப் பார்த்த காவலர்கள் பின்னர் அவருக்கு அபராதம் விதிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டனர் இந்த சம்பவம் தற்ப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.