Viral video : பசுக்களை கொடூரமாக அடித்து வெள்ளத்தில் தள்ளும் அதிர்ச்சி வீடியோ!!

Aug 30, 2022, 12:54 PM IST

மத்தியப்பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் கரை புரண்டு செல்லும் பிஹத் ஆற்று வெள்ளத்தில் பசுக்களை கொடூரமாக அடித்து தள்ளிய குற்றச்சாட்டின் கீழ் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது விலங்குகள் வதைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தடியால் பசுக்களை கொடூரமாக அடிக்கையில், அவை தப்பிக்க வழி இல்லாமல் ஆற்று கால்வாயில் விழுந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவது பரிதாபமான காட்சியாக உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்துள்ளது.