Apr 14, 2023, 3:24 PM IST
கர்நாடகாவில் வருகிற மே 10-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு காங்கிரஸ் - பாஜக கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஒரு பக்கம் பிரச்சாரங்கள் படுஜோராக நடைபெற்று வர, மறுபுறம் கட்சித் தாவல்களும் நடந்து வருகின்றன. அந்த வகையில் தற்போது கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான லட்சுமண் சாவடி காங்கிரஸில் இணைந்துள்ளார். இந்த தேர்ந்தலில் அவருக்கு பாஜக சீட் தர மறுத்ததன் காரணமாக அவர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்திருக்கிறார். இன்று கர்நாடக மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியான சித்தராமையாவை அவரது இல்லத்தில் சந்தித்த லட்சுமண் சாவடி காங்கிரஸில் இணைந்துகொண்டார்.