டூ வீலர்க்கு ஃபைன் போட்ட போலீஸ்.. ஆத்திரத்தில் தீ வைத்து கொளுத்திய இளைஞர்..! பரபரப்பு வீடியோ

Sep 6, 2019, 11:37 AM IST


இந்தியா முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டம் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது அந்தவகையில் டெல்லியில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ளது. 

போக்குவரத்து விதிகளை மீறுவோரிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது டெல்லியில் நேற்று ராகேஷ் என்ற வாகன ஒட்டி குடிபோதையில் வாகனம் ஓட்டியதால்  ரூ.25 ஆயிரம் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். ஆத்திரத்தில் தனது இருசக்கர வாகனத்தை நடுரோட்டில் தீயிட்டு கொளுத்திய வாகன ஓட்டி. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.