Nov 12, 2022, 4:45 PM IST
மகாராஷ்டிரா மாநிலம், தானே பகுதியில் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து, குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 400 பண்டல்களாக கட்டிவைக்கப்பட்டிருந்த 8 கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பக 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.