வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட துணை முதல்வர்.. குடும்பத்தையே அலேக்காக தூக்கிய திக் திக் நிமிட அதிர்ச்சி வீடியோ..!

Sep 30, 2019, 5:19 PM IST

இயற்கை சீற்றத்திற்கு ஏழை,பணக்காரர், நல்லவர் மற்றும் கெட்டவர் என்ற வித்தியாசம் எல்லாம் தெரியாது என்பதை புரிந்துகொள்ளும் விதமாக அமைந்துள்ளது பீகாரில் நடந்த சம்பவம்.

பொதுவாகவே மனித சக்தியால் இயற்கை சீற்றத்தை முன்கூட்டியே அறிய முடிந்தால் அதனை சமாளிக்க முடியுமே தவிர முற்றிலும் தடுக்க முடியுமா என்றால் பெரும் கேள்விக்குறி தான் இப்படியான நிலையில் இப்படியான நிலையில் இதற்கு உதாரணமாக அமைந்துள்ளது 

பீகார் மாநிலத்தில் கடந்த இரண்டு தினங்களாக கடும் மழை பெய்துவருகிறது.இந்த மழையின் காரணமாக இதுவரையில் 87 பேர் உயிரிழந்துள்ளனர் அதில்,பீகார் மாநிலத் தலைநகர் பாட்னா மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு பல பகுதிகளில் ஆறு அடி வரையில் தண்ணீர் தேங்கியுள்ளது. 

 பீகார் மாநில துணை முதல்வர் சுஷில் மோடியின் வீட்டைச் சுற்றி தண்ணீர் சூழ்ந்ததால் அவரும் அவரது குடும்பத்தினரும் வீட்டில் சிக்கிக் கொண்டனர். இதனை அறிந்த தேசிய பேரிடர் படகில் சென்று சுஷில் மோடியையும் அவரது குடும்பத்தினரையும் மீட்டனர்.

வெள்ளப்பெருக்கில் பிகார் மாநில முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் சிக்கிக்கொண்டது அவர்களை மீட்பு பணியினர் சாதுரியமாக காப்பாற்றும் நிகழ்வு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது