Jul 26, 2022, 5:53 PM IST
ஜிஎஸ்டி உயர்வு, அமலாக்கத்துறை மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுவதாக கூறி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி விஜய் சவுக்கில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை டெல்லி போலீசார் கைது செய்தனர். மேலும், இளைஞரணி தலைவர் ஶ்ரீநிவாஸ் என்பவரை டெல்லி போலீசார் தலைமுடியை பிடித்து இழுத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது