Aug 2, 2019, 12:35 PM IST
குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது குஜராத்தில் 7 பேரும் ராஜஸ்தானில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர் மேலும் குஜராத் மாநிலத்தின் வதோதரா மாவட்டத்தில் கன மழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன வடதோராவின் தர்ஷனம் செண்ட்ரல் பார்க்கில் வெள்ளத்தில் முதலைகள் வரத் தொடங்கியதாக கூறப்பட்டனன .
அதில் ஒரு குடியிருப்புப் பகுதியில் முதலையிடம் நாய் ஒன்று மாட்டிக்கொண்டது முதலை நாயின் காலை கவ்வி கொல்ல முயன்ற போது சுற்றியிருந்த குடியிருப்பு வாசிகள், வெள்ளத்தில் தத்தளித்த நாயை முதலையிடம் இருந்து மீட்க கயிறுகளை தூக்கி வீசிப் பார்த்தனர். அதுக்குள்ள நாய் சமர்த்திமாக உயிர் தப்பியது.
அதன் பின்னர் வனத்துறையினர் முதலைகளை பிடித்து பண்ணைகளுக்கு ஏற்றிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.