Aug 9, 2019, 1:24 PM IST
தமிழிலும், ஆங்கிலத்திலும் 2 ஸ்டேட்ஸ், ரெவொல்யூஷன் 2020, ஹாஃப் கேர்ள்பிரண்டு போன்று உள்ளிட்ட பல நாவல்களை எழுதி தமிழகம் உள்ளபட பல மாநிலங்களில் இளம் வாசகர்கள் தன் வசம் வைத்துள்ளர்
இவரின் பல நாவல்களின் தழுவலில் இந்தி திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இவரின் பல புத்தகங்களை சாதாரணமாக ரயில்வே நிலையத்திலும், பிளாட் ஃபார்ம் புத்தகக் கடைகளிலும் கூட காண முடியும் சில நேரங்களில் புத்தக நிலையங்களில் தேடிச் சென்று வாங்காதவர்களும் பல சமயத்தில் ரயில், பேருந்துகளிலும் மற்றும் கடைத்தெருக்களின் வழியேவும் பயணம் செல்லும்போது வாங்கிவிடுவர்கள்
அப்படித்தான் எழுத்தாளர் சேத்தன் பகத்திடம் மும்பையில் ஒரு சிக்னலில் புத்தகம் விறக்கும் பையன் ஒருவன், சேத்தன் பகத் எழுதிய புத்தகம் உள்ளிட்ட சில புத்தகங்களை காட்டி, கூவி கூவி விற்றுள்ளான். அவனிடம் சேத்தன் பகத்தின் வேறு புத்தகங்கள் இருக்கிறதா? என்று சேத்தன் பகத் கேட்டுள்ளார். அந்த பையனோ, இதெல்லாம் ஆன்லைன் பிரிண்டிங் புத்தகங்கள் என்று உண்மையைச் சொல்லியிருக்கிறேன். மேலும் அவை நன்றாக விற்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளான்.அப்பொழுது அவனிடம் தன்னை சேத்தன் பகத் என்று அறிமுகப்படுத்திக்கொண்டதோடு, அந்த பையனின் அதிர்ச்சியை ரசித்துள்ளார்.