Jul 21, 2022, 4:42 PM IST
பெங்களூரூ இணை கமிஷ்னர் Dr. பிஆர் ரவிகாந்த் கவுடா அண்மையில் வீடியோ ஒன்று டுவீட் செய்திருந்தார். அதில், இளைஞர் ஒருவர் தரமான ஹெல்மெட் அணிந்துகொண்டு சென்றுகொண்டிருந்த போது, சாலை வளைவில் எதிர்பாதாரவிதமாக பேருந்து வரவே அந்த இளைஞரும் நிலைதடுமாறி பேருந்தின் சக்கரத்தில் சிக்கினார். ஹெல்மெட் அணிந்திருந்த ஒரே காரணத்தால் அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
இந்த வீடியோவை வைத்து பெங்களூரு போலீசார், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகின்றனர்.