Jan 17, 2024, 12:39 PM IST
உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயிலில் கட்டுமானம் பணி நிறைவு பெற்றதை அடுத்து கும்பாபிஷேகம் ஜனவரி 22ம் தேதி வெகு விமர்சியாக நடைபெற உள்ளது. இந்நிலையில், கும்பாபிஷேக விழாவிற்கான அழைப்பிதழ்களின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதில், ராமர் கோயிலின் கட்டிட அமைப்பு மற்றும் பகவான் ஸ்ரீராமரின் இளமைப்பருவ உருவம் ஆகியவை அந்த அழைப்பிதழ்களில் இடம்பெற்றுள்ளது. மேலும் ராமர் கோயில் அழைப்பிதழில் ராம ஜென்மபூமி இயக்கத்தில் ஈடுபட்ட சில முக்கிய நபர்களின் சுருக்கமான சுயவிவரங்கள் அடங்கிய சிறு புத்தகமும் இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக பாரத பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் கோவில் அறக்கட்டளையின் தலைவர் மஹந்த் நிருத்யா கோபால் தாஸ். ஆகியோர் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று விழா அட்டையின் உள்ளே குறிப்பிடப்பட்டுள்ளது.