Sep 28, 2019, 3:37 PM IST
மேற்கு வங்காளம் மாநிலம் ஜல்பாய்குரி மாவட்டத்தில் இருக்கும் பனார்ஹாட்-நக்ராகடா வழித்தடத்தில் சிலிகுரி- துப்ரி இடையே ஓடும் இன்டர்சிட்டி ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தை யானை ஒன்று கடக்க முயல அதன் மீது ரயில் பயங்கரமாக மோதியது.
இதில் படுகாயமடைந்த யானை 30 மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டது. ரத்த காயங்களுடன் கிடந்த யானையை பயணிகள் தங்கள் செல்போனில் காணொளியாக பதிவு செய்த காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.