Nov 10, 2022, 9:42 PM IST
ஒடிசா மாநிலம் கியோஞ்சார் மாவட்டத்தில் உள்ள ஷிலிபாடா முந்திரி காடு அருகே வசிக்கும் கிராம மக்கள் நாட்டு மதுபானம் தயாரிப்பதற்காக போதை தரும் பூக்களால் காய்ச்சப்பட்ட தண்ணீரை மரத்தில் கட்டிவைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த பானைகளை உடைத்த ஒரு யானைக்கூட்டம் போதையில் மயங்கி விழுந்துள்ளன.
மதுபானங்களை எடுக்க வந்த கிராமவாசிகள், யானைகள் மயங்கி கிடப்பதைக் கண்டு எழுப்ப முயன்றுள்ளனர். ஆனால், யானைகளை எழுப்ப முடியாமல் போனதைத் தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பானைகள் உடைந்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு யானைகளை எழுப்பி வனப்பகுதிக்குள் அனுப்பினர். மொத்தம், 9 ஆண் யானைகள், 6 பெண் யானைகள் மற்றும் 9 குட்டி யானைகள் என வனத்துறையினர் தெரிவித்தனர்.