Telangana Flood : வெள்ளப்பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற நிருபர் பலி! - உடல் மீட்பு

Jul 16, 2022, 10:45 AM IST

தெலங்கானாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஜக்டையல் மாவட்டம் பூபதிபூர் சாலை ராமோஜிபேட்டை பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பகுதியில் செய்தி சேகரிப்பதற்காக தனியார் தொலைக்காட்சி நிருபர் சென்றதாக கூறப்படுகிறது. அவர், தான் சென்ற காருடன் சேர்ந்து வெள்ளத்தில் சிக்கியதாக தெரிகிறது. அதிலிருந்து தப்பிக்க முடியாமல் அவர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு அவரது உடல் ஒரு புதரிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.