Aug 10, 2022, 4:11 PM IST
சுகா கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலுக்குள் நுழைந்த முகமூடி திருடன் ஒருவன், சாமியை கும்பிட்டுவிட்டு அங்கிருந்த உண்டியலை திருடிச்சென்றுள்ளார். இந்த சம்பவம் கடந்த 5ம் தேதி நடந்துள்ளது. தற்போது போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகையில் இந்த சம்பவம் தெரியவந்துள்ளது. அந்த முகமூடி திருடன் கோவில் உண்டியலுடன், இரண்டு பெரிய மணிகளையும் திருடிச் சென்றுள்ளார்.