Aug 16, 2019, 5:33 PM IST
தென்மேற்குப் பருவமழை காரணமாக, கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, குஜராத் மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், இந்த மாநிலங்களின் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்தியப்பிரதேச மாநிலம் ராஜ்கார்க்கில் தாறுமாறாக ஓடும் ஆற்றில் வெள்ளத்தை கடந்த வியாழக்கிழமையன்று ஒரு நபர் ஒரு கரையில் இருந்து, மற்றொரு கரைக்கு செல்ல முயன்றார். அவரை செல்ல வேண்டாம் என சுற்றியிருந்த பொதுமக்கள் எச்சரித்தும் கேட்காமல் தொடர்ந்து வெள்ளத்தில் நடந்து சென்றார். அப்போது அவர் வெள்ள நீரோட்டத்தின் வேகத்தை சமாளிக்க முடியாமல்,ஓடும் ஆற்றில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரது உடலை போலீசார் இன்று மீட்டனர்.தற்ப்போது வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சி ஏறபடித்துள்ளது