கார்கில் போர் 25வது ஆண்டு தினம்.. போர் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்துகிறார் பிரதமர் மோடி!

Jul 26, 2024, 7:48 AM IST

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியை கடந்த 1999-ம் ஆண்டு ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முயற்சி செய்தது. இதனை நம் இந்திய ராணுவ வீரர்கள் முறியடித்தனர்.  இந்த போர் வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கார்கில் வெற்றி தின 25-ம் ஆண்டாகும். இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று கார்கில் செல்கிறார். அங்கு அவர் போரின் போது வீரமரணம் அடைந்த துணிச்சலான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.