Jan 11, 2020, 5:01 PM IST
உத்தரபிரதேச மாநிலம் கன்னாஜ் மாவட்டம், குர்சகாய்கஞ்ச் பகுதியில் இருந்து நேற்று இரவு ஜெய்ப்பூர் நோக்கி ஆம்னி சொகுசு பேருந்து 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.
இந்த பேருந்து, கன்னாஜ் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பேருந்தும்- லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் தீ பற்றி எரிந்தலில் 20 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 25 பேர் சிறிய காயங்களுடன் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.