Vijay Sethupathi : தகுதியானவர்களுக்கு ஓட்டு போடுங்க... கைகூப்பி வேண்டுகோள் விடுத்த விஜய் சேதுபதி - வீடியோ இதோ

Apr 3, 2024, 12:07 PM IST

வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளது. அந்த வகையில் தமிழ் மக்களுக்கான விழிப்புணர்வு வீடியோவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பேசி இருக்கிறார். அதில் தகுதியானவர்களுக்கு வாக்களிக்குமாறு கூறி உள்ள அவர், ஒவ்வொருவரின் வாக்கு அனைத்தையும் மாற்றும் என்பதால் தவறாமல் வாக்களிக்குமாறு வலியுறுத்தி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.