Campaignன தான் தொரக்கட்டுமா? மைக்கை கையில் எடுக்கட்டுமா? மாஸ் பீட்டில்.. தளபதி குரலில் - GOAT முதல் சிங்கள்!

Apr 14, 2024, 6:26 PM IST

முதல் முறையாக பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்களை வைத்து "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் அவர்கள் இரு வெவ்வேறு கதாபாத்திரத்தில் நடி த்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்தில் தமிழ் திரை உலகின் மூத்த நடிகர்களான பிரசாந்த் மற்றும் பிரபுதேவா, நடிகைகள் லைலா மற்றும் சினேகா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். 

விறுவிறுப்பாக உருவாகி வரும் இந்த திரைப்படத்திலிருந்து தற்பொழுது முதல் சிங்கள் பாடல் வெளியாகி உள்ளது. தளபதி விஜய் அவர்களுடைய குரலில், மதன் கார்க்கியின் வரிகளில், யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் இந்த பாடல் ஒரு மிகச் சிறந்த பாடலாக உருவாகியுள்ளது. தற்பொழுது தளபதி விஜய் அவர்களுடைய ரசிகர்கள் இந்த பாடலை கொண்டாடி வருகின்றனர்.

விரைவில் இந்த பட பணிகளை முடிக்கும் தளபதி விஜய் அடுத்தபடியாக தனது 69வது பட பணிகளை முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபாவுள்ளார். இந்த முதல் சிங்கள் பாடலிலும் பல அரசியல் சம்மந்தமான வரிகள் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.