அதிர்ச்சி அடைந்த தமிழ் திரையுலகினர்..! தேசிய விருது பட்டியலை வெளியிட்ட முழு வீடியோ..

Aug 9, 2019, 7:15 PM IST

மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் 66 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று அறிவிக்கப்பட்டன. இந்த விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்க உள்ளார். 

 தமிழில் சிறந்த படத்திற்கான தேசியை விருது, இன்னும் திரைக்கு வராத பிரியா கிருஷ்ண மூர்த்தி இயக்கிய  'பாரம்' படத்திற்கு கிடைத்துள்ளது.

சிறந்த தெலுங்கு படமாக கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதே படத்திற்கு சிறந்த ஆடை வடிவமைப்பாளர் மற்றும் சிறந்த நடிகை கீர்த்தி சுரேஷ் என தேர்வு செய்யப்பட்டு. மொத்தம் 'மகாநடி' மற்றும் மூன்று தேசியை விருதுகளை தட்டி சென்றுள்ளது.

சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருது, சர்ஜிக்கல் தாக்குதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'உரி'  படத்திற்கு கிடைத்துள்ளது.

சிறந்த இசையமைப்பாளருக்கான விருது, பல்வேறு தடைகளை, தாண்டி இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலிக் இயக்கி இசையமைத்திருந்த 'பத்மாவத்' படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு சிறந்த நடனத்திற்கான விருதும் கிடைத்துள்ளது.சிறந்த பின்னணி பாடகருக்கான தேசியை விருது பத்மாவத் படத்திற்காக அரிஜித் சிங்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. 

சிறந்த இந்தி படமாக இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கிய  அந்தாதூன் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த துணை நடிகையாக 'பாதாய் ஹோ' படத்தில் நடித்த  சுரேகா சிக்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த பின்னணி பாடகிக்கான விருது பிந்து மாலினிக்கு நதிசாராமி என்கிற கன்னட படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

நடிகை சமந்தா மற்றும் ராம் சரண் நடித்த ரங்கஸ்தலம் படத்திற்கு  சிறந்த ஒலி கலவைக்கான தேசியை விருது வழங்கப்பட்டுள்ளது.

 சிறந்த சண்டை இயக்கம், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்-க்கான தேசிய விருது ’கே.ஜி.எஃப்’ திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது. தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. 

சிறந்த நடிகர்களுக்கான விருது  ஆயுஷ்மான் குரானாவுக்கு அந்தாதூன் படத்திற்கும்,  விக்கி கவுசலுக்கு உரி படத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகைக்கான தேசிய விருது நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான மகாநடியில் நடித்ததற்காக ’கீர்த்தி சுரேஷிற்கு’ வழங்கப்பட்டுள்ளது 

சிறப்பு ஜூரி விருது ஜோஜு ஜார்ஜ் (ஜோசப்) மற்றும் சாவித்ரி சசிதரன்  (சூடானி பிரம் நைஜிரியா) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது

 சிறந்த திரைப்படத்திற்கான விருது ஹெலாரோவுக்கு குஜராத்தி செல்கிறது

தேசிய ஒருங்கிணைப்பு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருது ஒண்டல்லா எரடல்லா (கன்னடம்)

சிறந்த அறிவியல் தொழில்நுட்ப படத்திற்கான தேசிய விருது 'ஜி.டி.நாயுடு - தி எடிசன் ஆப் இந்தியா' என்ற படத்திற்கு அறிவித்துள்ளனர்.

2017ல் 6 தேசிய விருதுகள், ’2018ல் 4 தேசிய விருதுகள் பெற்ற தமிழ்த் திரையுலகம் இந்த வருடம்  ஒரு பெரிய பூஜ்யத்தை மட்டுமே பெற்றிருக்கிறது. இதனால் தரமான படங்கள் தந்த சில இயக்குநர்கள் அதிர்ந்துபோயுள்ளனர்.