கோவையில் கோவில் கோவிலாக சுற்றும் நடிகர் சூர்யா!

Dec 2, 2024, 3:20 PM IST

கங்குவா தோல்விக்கு பின்னர் நடிகர் சூர்யா ஹீரோவாக நடிக்கும் அடுத்த படத்தை RJ பாலாஜி இயக்கி வருகிறார். சூர்யா 45 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புக்காக கோயம்புத்தூர் சென்றுள்ள நடிகர் சூர்யா, அங்கு அடிக்கடி கோவில்களுக்கு சென்று வருகிறார். அப்படி பேரூர் கோவிலுக்கு அவர் சென்றபோது எடுத்த வீடியோ இது.