Feb 10, 2020, 12:21 PM IST
நீண்ட நாட்களுக்கு பிறகு மாநாடு திரைப்படத்தில் படப்பிடிப்பு தொடங்கியது..
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சின் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் திரைப்படம்தான் மாநாடு..
இந்த திரைப்படத்தில் ஆரம்பத்தில் பல சர்ச்சைகள் நடிகர் சிம்பு மீது சுமத்தப்பட்டது. பின்னர் இந்த மாநாடு திரைப்படம் சிம்புவின் கைகளைவிட்டு நழுவி வேறு ஒரு நடிகரிடம் சென்றது..
பின்னர் சிம்பு மகாமாநாடு என்ற படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியானது பின்னர் பல பிரச்சனைகளுக்கு பிறகு மீண்டும் சமரசம் பேசி சுரேஷ் காமாச்சி மற்றும் சிம்பு மாநாடு படத்தில் மீண்டும் இணைந்துள்ளார் .இந்நிலையில் இந்த படத்தில் இணைந்துள்ள மற்ற நடிகர் நடிகையரின் தகவல் வெளியானது.இப்பொழுது படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது..