Santhanam: சந்தானத்தின் 'ஏஜென்ட் கண்ணாயிரம்' படத்தில் இருந்து வெளியான 'ஒப்பாரி ராப்' லிரிகள் பாடல்..!

Nov 3, 2022, 6:41 PM IST

நடிகர் சந்தானம், காமெடியனாக நடித்த போது படு பிஸியான நடிகராக வலம் வந்தார். ஆனால் ஹீரோவாக தான் நடிப்பேன் என அடம்பிடிக்க துவங்கிய பின்னர், இவர் நடிப்பில் வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே வெளியாகிறது. அந்த வகையில் தற்போது, சந்தானம் 'ஏஜென்ட் கண்ணாயிரம்' என்கிற படத்தில் துப்பறியும் நிபுணராக நடித்துள்ளார்.

மனோஜ் பீதா இயக்கி இருக்கும் இந்த படத்தை, லாபிரிந்த் பிலிம்ஸ் தயாரித்துளளது. மேலும் இந்த படத்தில் ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன், முனிஷ்காந்த் மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் மற்றும் சரவணன் ராமசாமி ஆகிய இருவர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். அஜய்  படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இப்படம் ஸ்வரூப் ஆர்எஸ்ஜே எழுதி இயக்கி கடந்த 2019 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா என்ற படத்தின் ரீமேக் ஆகும். காமெடி கலந்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், இடம்பெற்றுள்ள 'ஒப்பாரி ராப்' பாடல் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.