Oct 9, 2019, 6:05 PM IST
பிக்பாஸ் 3 போட்டி முடிவடைந்த பின் போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்களை நேரில் சந்தித்து வருகின்றனர். சாண்டி வீட்டில் வைத்த விருந்தில் கவின், தர்ஷன், அபிராமி, முகென் ராவ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
அதனை தொடர்ந்து சாண்டி நடத்தி வரும் நடன பள்ளிக்கு சென்ற லாஸ்லியா அங்கிருந்த மாணவர்களுடன் இணைந்து நடிகர் தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் வரும் பாட்டுக்கு லாஸ்லியா செம குத்தாட்டம் போட்டு ஆடுகிறார். அதேபோல் சாண்டி தனது ரசிகர்களுடன் சேர்ந்து நடிகர் விஜய் நடித்து உள்ள பிகில் படத்தில் வரும் பாட்டுக்கு வெறித்தனமாக ஆடுகிறார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.