Dec 13, 2023, 11:03 PM IST
KGF பட இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில், நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'. பாகுபலி படத்திற்கு பின்னர் தொடர் தோல்விகளை சந்தித்து வரும், பிரபாஸ் இபபடத்தை அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், இப்படம் டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாக உள்ளது. எனவே படக்குழு புரமோஷன் பணிகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில், தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ப்ரிதிவிராஜ் - பிரபாஸ் இருவருக்கும் இடையே உள்ள நட்பின் ஆழத்தை வெளிப்படுத்தும் விதத்தில் இந்த பாடல் உள்ளது. பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளிலும் இன்று முதல் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.