கைதி 2 கன்ஃபார்ம்.. களை கட்டப்போகும் நவம்பர் மாதம்..! அடுத்தடுத்து 17 படம் ரிலீஸ்!! வீடியோ

Nov 2, 2019, 12:53 PM IST

பொதுவாக ஒரு வாரத்திற்கு 2 மற்றும்  3 படங்கள் மட்டுமே திரையரங்குகளில் வெளியாகும் ஆனால் இந்த நவம்பர் மாதம் 17 படங்கள் திரைக்கு வருகின்றன விக்ரம் மகன் கதாநாயகனாக அறிமுகமாகி ஆதித்ய வர்மா, சீமானின் தவம், யோகம் யோகி பாபு நகைச்சுவை படமான பட்லர் பாலோ, சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் ஸ்ரீபிரியங்கா நடித்துள்ள மிக மிக அவசரம் ஆகிய படங்கள் நவம்பர் 8 தேதி வெளிவருகின்றன அதனை தொடர்ந்து விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன், தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா, விஷாலின் ஆக்சன், பிக் பாஸ் ஆர்வ நடித்துள்ள மார்க்கெட் ராஜா ஆகிய படங்களும் இந்த மாதம் திரைக்கு வருகிறது 

சமுத்திரக்கனின் நாடோடிகள் 2 , திரிஷாவின் கர்ஜனை,  இயக்குனர் சேரன் கதாநாயக நடித்துள்ள ராஜாவுக்கு,சுந்தர் சி நடித்து உள்ள இருட்டு, பிழை, களரி , தமயந்தி ,கண்ணாடி ,ஜடா ஆகிய படங்களும் இந்த மாதம் வெளியாக உள்ளன இவற்றில் ஒரு சில படங்கள் கடைசி நேரத்தில் தள்ளிப்போக வாய்ப்பு இருக்கின்றன. இதைப்போல் கடந்த அக்டோபர் மாதம் 14 படங்கள் வெளிவந்தன இதில் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான அசுரன் படம் 100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது 

தீபாவளிக்கு வெளியான விஜய்யின் பிகில் கார்த்தியின்  கைதி  நல்ல வரவேற்பு கிடைத்தது பிகில் திரைப்படம் ரூபாய் 180 கோடி செலவில் தயாரான இந்த படம்  ரூபாய் 200 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது 

அதேபோல் கார்த்தியின்  கைதி திரைப்படம் பல திரையுலகினரும் கவர்ந்தது இதில் தெலுங்கில்  ரீ-மேக்கில் வெங்கடேஷ்வும்  இந்தியில் ரீ-மேக்கில் ஷாருக்கும்  நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர் என்று கூறப்படுகிறது கைதி 2 பாகம் தயாராகும் என்றும் அறிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது