Jul 11, 2024, 10:28 PM IST
கடந்த 1996ம் ஆண்டு சங்கர் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா உள்ளிட்ட பலர் நடித்து வெளியான இந்தியன் திரைப்படத்தின் படத்தின் 2ம் பாகம், நாளை ஜூலை மாதம் 12ஆம் தேதி உலக அளவில் வெளியாகவுள்ளது. கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் கழித்து ஒரு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவது இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்காதது ஒரு பின்னடைவாக பார்க்கப்பட்டாலும், அனிருத்தின் துள்ளல் இசை, இந்த காலத்து இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது என்பது படத்தின் பிளஸ் பாயிண்டாகவே உள்ளது. மறைந்த நடிகர்கள் விவேக், நெடுமுடி வேணு மற்றும் மனோபாலா உள்ளிட்டோரின் பகுதிகளும் இந்த படத்தில் இணைங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நமது ஏசியாநெட் தமிழ் செய்தி நிறுவனம், இந்தியன் 2 திரைப்படம் ரிலீஸ் குறித்து ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. இந்தியன் 2 படம், அனிருத்தின் இசை, ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்காதது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு மக்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.