Sep 28, 2022, 6:23 PM IST
சீரியல் நடிகை ஜெயலட்சுமி, கடந்த 5 வருடங்களுக்கு மேலாக சிநேகம் என்கிற அறக்கட்டளை ஒன்றை துவங்கி அதன் மூலம் ஏழை குழந்தைகள், தந்தையை குழந்தைகள், மற்றும் பலருக்கு தங்களால் இயன்ற உதவியை செய்து வருவதாகவும், இந்நிலையில் திடீர் என சினேகன், தன்னுடைய அறக்கட்டளை பெயரிலேயே ஜெயலட்சுமி அறக்கட்டளையை துவங்கி மோசடி செய்து வருவதாக காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
மேலும் இந்த விவகாரம் குறித்து, ஜெயலக்ஷ்மிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், பொய்யான முகவரியில் தான் இந்த அறக்கட்டளை இயக்கி வருவதாகும், இதுகுறித்து பேசுவதற்கு போன் செய்தால்... தனிமையில் சந்தித்து ஜெயலக்ஷ்மி காபி குடிக்க அழைப்பதாகவும் புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.
சினேகனின் இந்த புகார் முற்றிலும் பொய்யாக ஜோடிக்கப்பட்டது என காவல் நிலையத்தில் ஜெயலக்ஷ்மி புகார் அளிக்க சென்றபோது, போலீசார் இவரது புகாரை ஏற்க மறுத்ததாகவும், இதை தொடர்ந்து நீதி மன்றத்தை நாடிய ஜெயலக்ஷ்மிக்கு சாதகமாக தற்போது சினேகன் மீது FIR பதிய, நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் சினேகன் தரப்பில் இருந்து தன் மீது கூறிய குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என, தற்போது செய்தியாளர்களை சந்தித்து, தனக்கு பக்க பலமாக இருந்த அனைவருக்கும் ஜெயலக்ஷ்மி நன்றி தெரிவித்துள்ளார்.