Feb 17, 2023, 10:31 AM IST
அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த துணிவு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. எச்.வினோத் இயக்கிய இத்திரைப்படம் ரூ.200 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது. அண்மையில் இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகி, அதிலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இப்படி துணிவு படத்தின் அதிரி புதிரியான வெற்றியால் செம்ம குஷியில் இருக்கும் அஜித், அண்மையில் அதைக் கொண்டாட வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்தார்.
அதன்படி இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, போர்ச்சுகல் போன்ற நாடுகளுக்கு சுற்றுலா சென்றபோது எடுக்கப்பட்ட அஜித்தின் புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி வைரலாகி வருகின்றன. குறிப்பாக அங்கு அஜித் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக கார் ஓட்டிச் செல்லும் வீடியோவும் வெளியாகி உள்ளது. அஜித்தின் இந்த மாஸான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் செம்ம வைரல் ஆகி வருகின்றன.