Dec 3, 2019, 11:41 AM IST
'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் மூலம் பிரபலம் ஆன யாஷிகா ஆனந்த். 'பிக்பாஸ்-2' நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், பட்டிதொட்டியெங்கும் மேலும் பிரபலமான இவர், தற்போது 'பிக்பாஸ்' நண்பர் மஹத்துடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இரவு பார்ட்டிகளில் கிளுகிளுப்பாக ஆட்டம் போடும் வீடியோக்களையும், கவர்ச்சி புகைப்படங்களையும் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு அதிரவைத்து வருகிறார்.கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரை, ஆபாச நடிகை மியா கலிபாவுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் கிண்டல் செய்தனர். இது ஒரு பக்கம் இருக்க தற்போது, வெறித்தனமாக சண்டைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும், யாஷிகாவை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.