Nov 26, 2019, 1:04 PM IST
2018-ம் ஆண்டு ஓராயிரம் கினாக்களால் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமான சாக்ஷி அகர்வால், அதே 2018-ம் ஆண்டில் ரஜினி நடித்த காலா திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிலும் அறிமுகமானவர். இவர் இத்திரைப்படத்தில் ரஜினியின் மருமகள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
2019-ம் ஆண்டு தொடக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் திரைப்படத்தில் நயன்தாராவின் உதவியாளரான டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.சாக்ஷி அகர்வால் அதைப்போல் 100-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பர படங்களில் நடித்துள்ளார் பின்னர் 2019-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக பங்கு பெற்று இன்னும் பிரபலமானார் சமீபத்தில் கவர்ச்சியாக யானை மீது அமர்ந்து போட்டோ ஷூட் செய்துள்ளார் அப்போது யானை செய்த குறும்புத்தனம் வீடியோவில் பதிவாகியுள்ளது இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சாக்ஷி அகர்வால்.