என் தங்கம்... மயில்சாமி மாதிரி ஒரு நல்ல மனுஷன இனி பார்க்க முடியாது - கதறி அழுத சீனியம்மா பாட்டி

Feb 19, 2023, 2:39 PM IST

நடிகர் மயில்சாமி மாரடைப்பால் மரணமடைந்த நிலையில், அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் மயில்சாமியின் வீட்டிற்கு ஏராளமான திரைப்பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகை சீனியம்மா பாட்டியும் அங்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.

மெர்சல் படத்தில் விஜய்க்கு பாட்டியாகவும், விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு பாட்டியாகவும் நடித்து பிரபலம் ஆனவர் சீனியம்மா. இவர் மயில்சாமியின் வீடருகே தான் வசித்து வருகிறார். மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் பேசிய செல்லம்மா, அவரைப்போல ஒரு நல்ல மனிதனை இனி பார்க்கவே முடியாது என கண்ணீர் மல்க தெரிவித்தார்.