பயனரின் தனியுரிமையை மேம்படுத்த வாட்ஸ்அப் (WhatsApp) பல்வேறு அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது.
உலகின் மிகப்பெரிய சமூக ஊடகமான வாட்ஸ்அப்பில் (WhatsApp) தெரியாத எண்களில் இருந்து வரும் ஸ்பேம் அழைப்புகள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இந்த நிலையில் மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
undefined
இது பயனர்கள் பிளாட்ஃபார்மில் அத்தகைய அழைப்புகளை தானாகவே முடக்க அனுமதிக்கிறது. இன்ஸ்டாகிராமில் உள்ள மெட்டா சேனலின் கூற்றுப்படி, இந்த புதிய அம்சம் வாட்ஸ்அப்பை மேலும் தனிப்பட்டதாக்கும் மற்றும் பயனர்களுக்கு அதிக கட்டுப்பாட்டைக் கொடுக்கும் என்று கூறியுள்ளது.
இந்த அம்சம் சிறிது காலமாக பீட்டா சோதனையில் உள்ளது. மேலும் இப்போது Android மற்றும் iOS ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு கிடைக்கிறது. வாட்ஸ்அப்பின் சமீபத்திய பதிப்பை உங்கள் மொபைலில் நிறுவியுள்ளீர்களா அல்லது கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் மூலம் அப்டேட் செய்துள்ளீர்களா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
வாட்ஸ்அப்பின் நிலையான பதிப்பைக் கொண்ட Galaxy S23 Ultra மற்றும் Realme 11 Pro+ போன்ற போன்களில் இந்த அம்சம் இடம்பெற்றுள்ளது. இதனை எவ்வாறு செய்யவேண்டும் என்பதை பார்க்கலாம். வாட்ஸ்அப்பைத் திறக்கவும். அதில், மேல் வலது மூலையில் உள்ள (top right corner) மெனுவைக் கிளிக் செய்யவும். (settings) அமைப்புகளுக்குச் செல்லவும், தனியுரிமை (Privacy) என்பதைக் கிளிக் செய்யவும். அழைப்புகளைத் தேர்ந்தெடுக்கவும்.
"தெரியாத அழைப்பாளர்களை அமைதிப்படுத்து" (Silence Unknown Callers) என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். மெட்டா வாட்ஸ்அப்பில் ஒவ்வொரு வாரமும் புதிய அம்சங்களைச் சேர்த்து வருகிறது. மேலும் அனுப்பப்பட்ட செய்திகளை 15 நிமிடங்கள் வரை திருத்தும் திறனை WhatsApp அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
WhatsApp-ன் 5 சீக்ரெட் அம்சங்கள் உங்களுக்கு தெரியுமா.? தெரிஞ்சா அசந்துடுவீங்க