இனி தமிழிலேயே இ - மெயில் உருவாக்கலாம்...மெயில் அனுப்பலாம்..! சாத்தியமாக்கியது IAMAI..!

By thenmozhi g  |  First Published Oct 20, 2018, 4:54 PM IST

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பல்வேறு புதிய முயற்சியை மேற்கொண்டு உள்ளது IAMAI. கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி, இரண்டு நாள் பயிற்சி வகுப்பு குறித்த செமினார்,சென்னை விஐடி கல்லூரியில் நடத்தப்பட்டது.இந்த நிகழ்வில், இ-சேவை மையத்தின் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
 


இனி தமிழிலேயே இ- மெயில் உருவாக்கலாம். மெயில் அனுப்பலாம். IAMAI (INTERNET AND MOBILE ASSOCIATION OF INDIA) 

Latest Videos

undefined

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பல்வேறு புதிய முயற்சியை மேற்கொண்டு உள்ளது IAMAI.கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி, இரண்டு நாள் பயிற்சி வகுப்பு குறித்த செமினார்,சென்னை விஐடி கல்லூரியில் நடத்தப்பட்டது.இந்த நிகழ்வில், இ-சேவை மையத்தின் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மக்களின் நலனை கருத்தில் கொண்டு, பாமர மக்கள் முதல் தமிழை மட்டுமே எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் நோக்கில் இனி தமிழிலேயே இ மெயில் அனுப்பும் வசதியை ஏற்படுத்தி கொடுத்து உள்ளது IAMAI

IAMAI மூலம் தமிழில் மட்டுமல்ல, அவரவர் மொழிக்கு ஏற்ப அந்த மொழியிலேயே இ-மெயில் அனுப்பலாம். இந்த தகவல் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும் என்றும், IAMAI மூலம் மக்கள் பயன்பெற வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாக உள்ளது.

இந்த பயிற்சி செமினாரை நடத்திய IAMAI - வை சேர்ந்த ஆசிஷ், நிகழ்ச்சி முடிவில் தமிழில் இ-மெயில் உருவாக்குவது எப்படி என்பதை தெளிவாக விளக்கினார். இந்த தகவல் மக்களை சென்றடைந்தால், கண்டிப்பாக பாமர மக்களுக்கு மாபெரும் உதவியாக இருக்கும்  என்பதில் எந்த விதமான மாற்று கருத்தும் இருக்காது.

click me!