டுவிட்டரில் இனி 10 ஆயிரம் எழுத்துக்கள் வரையில் எழுதலாம்?

By Asianet Tamil  |  First Published Mar 6, 2023, 5:45 PM IST

டுவிட்டரில் ஒரு ட்வீட்டில் 10,000 எழுத்துகள் வரை எழுதுவதற்கான அம்சம் கொண்டு வரப்படுவதாகவும், இந்த அம்சம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் எலோன் மஸ்க் கூறியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
 


டுவிட்டரில் வழக்கமான பயனர்கள் 280 எழுத்துகள் கொண்ட ட்வீட்களை மட்டுமே இடுகையிட அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில், ட்வீட் எழுத்துக்களுக்கான வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. டுவிட்டர்  நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், 10,000 எழுத்துகள் கொண்ட ட்வீட்களை இடுகையிடுவதற்கான அம்சம் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

மேலும், இந்த அம்சம் விரைவில் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்றும் உறுதிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் இனி அதிகப்படியான, நீண்ட பதிவுகளை கூட டுவிட்டரில் பதிவிட முடியும்.  ப்ளூ சந்தா வைத்திருப்பவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட இந்த புதிய அம்சத்தின் அளவு அதிகம். எனவே, இனி ப்ளூ சந்தாதாரர்கள் இன்னும் அதிகமான எழுத்துகள் கொண்ட ட்வீட்களை இடுகையிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Latest Videos

undefined

வரவிருக்கும் அம்சமானது ப்ளூ சந்தாவிற்கு மட்டுமே வரையறுக்கப்படுமா அல்லது பணம் செலுத்தாத பயனர்களும் இந்த அம்சத்தை அனுபவிப்பார்களா என்பது தற்போது தெரியவில்லை.  இருப்பினும், எலோன் மஸ்க்கின் சமீபத்திய நடவடிக்கைகளை வைத்து பார்க்கும் போது,  இந்த அதிகப்படியான எழுத்து வரம்பு என்பது கட்டண முறையில் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 

ஸ்மார்ட்வாட்ச் வாங்க போறீங்களா? ரூ.1,500 முதல் ரூ.5,000 சிறந்த ஸ்மார்ட்வாட்சகள்!

வழக்கமான ட்விட்டர் பயனர்களுக்கான வரம்பை ஒரு குறிப்பிட்ட வித்தியாசத்தில் அதிகரிக்கவும், பணம் செலுத்தும் பயனர்களுக்கு 10,000 எழுத்து வரம்பை வழங்கவும் வாய்ப்புகள் உள்ளது. கூடிய விரைவில், அதாவது இந்த அம்சம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்போது முழுமையான விவரங்கள் தெரிய வரும். எலோன் மஸ்க் தரப்பில்  இந்த அம்சம் எப்போது வரும் என்ற உத்தேச தேதி வழங்கப்படவில்லை. பொத்தம் பொதுவாக "விரைவில்" வரும் என்று கூறிவிட்டார்.

இப்போதைய சூழலில், ப்ளூ சந்தாதாரர்கள் 60 நிமிடங்கள் வரை நீளமான வீடியோக்களை 1080p இல் பதிவேற்ற முடியும், ஆனால் இந்த நன்மை இணைய பதிப்பிற்கு மட்டுமே கிடைக்கும். இதே போல்,  ட்விட்டரில் மற்றவர்கள் பார்க்கும் முன் பதிவிட்ட ட்வீட்களை மாற்றி எழுதுவதற்குமான வசதியும் ப்ளூ சந்தாவில் கிடைக்கிறது. மேலும், எஸ்எம்எஸ் வழியாக Two Step Verfication பாதுகாப்பு வசதியும் வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
 

click me!